காயல்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் ஜீலானி பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஜீலானி பள்ளி லெப்பப்பா பண்ணை மற்றும் நெல்லை தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை, அருணா கார்டியாக் கேர் ஆகியவற்றின் சார்பில் நடந்த இந்த முகாமை ஜீலானி பள்ளி தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தொடங்கி வைத்தார். பள்ளியின் பொறுப்பாளர்கள் அகமது சுலைமான், சிராஜுத்தின் , வங்காளம் அப்துல் லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் உமா, ராமதாஸ் குழுவினரின் செயல்பாட்டில் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவ பயன்களை பெற்றனர். மருத்துவமனைகளின் நிர்வாகிகள் வேலு சுப்பிரமணியம், சொக்கலிங்கம், காயல்பட்டினம் பிரமுகர்கள் தாஜுதீன், மர்சூக் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.