ஊட்­டியில் பிளாட் கட்­டித்­த­ரு­வ­தாக கூறி ரூ. 1.46 கோடி மோசடி: தனியார் நிறு­வன இயக்­குநர் கைது: சென்னை மத்திய குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

ஊட்டியில் பிளாட் கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பலே ஆசா­மியை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர்.

சென்னை பட்­டி­னப்­பாக்கம், சீனி­வாசா அவி­ன்யூ ரோட்டைச் சேர்ந்­­தவர் இக்னேஸிஸ் தாமஸ் சுரேஷ் (59). இவர் சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அரு­ணிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி­யி­ருந்­த­தா­வது, ”சென்னை தி.நகரில் இயங்கிவரும் Nathan Foundation நிறுவனத்தின் இயக்குநர் கே.வி.சங்கரலிங்கம் என்பவர் பத்திரிக்கையில் ஒரு விளம்­பரம் அளித்­தி­ருந்தார். அதில் ஊட்­­டியில் பிளாட்டுகளை கட்டி விற்பனை செய்து வருவதாகவும், அங்கு 8 மாதத்திற்குள் பிளாட்டுகளை கட்டிடம் கட்டி கொடுக்கப்படும் என்றும் அந்த விளம்­ப­ரத்தில் கூறி­யி­ருந்தார். அவ்­வாறு கட்டித் தராத பட்சத்தில் அதற்கு வாடகை அல்லது இழப்பீட்டு தொகை தருவதாக கூறியிருந்தார். அதை உண்மை என்று நம்பி நானும் எனது மனைவி, மைத்துனர் மற்றும் இரண்டு நண்பர்கள் பெயரிலும் மொத்தம் 6 பிளாட்டுகள் வாங்கிவேனாம். அதற்குண்டான பணம் ரூ.1 கோடியே 45 லட்­சத்து 42 ஆயி­ரத்து 815- செலுத்­தினோம். ஆனால் நாதன் நிறுவனத்தின் ஒப்பந்தந்தத்தின்படி 8 மாதத்திற்குள் பிளாட்டுகளை கட்டி கொடுக்காமலும் அதற்குண்டான மாத வாடகை தொகையினை கொடுக்காமலும் மோசடி செய்து விட்டார். அவர் மீது நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறி­யி­ருந்தார்.

இந்த புகார் மனு மீது நட­வடிக்கை எடுக்­கும்­படி கமி­ஷனர் அருண் உத்­த­ர­வின் பேரில் சென்னை நகர மத்­தியக் குற்­றப்­­பி­ரிவு கூடுதல் கமி­ஷனர் ராதிகா மேற்­பார்­வையில் நம்பிக்கை ஆவண மோசடி பிரிவில் (EDF-2) வழக்குபதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைய­டுத்து தனிப்­படை போலீசார் சங்கரலிங்கத்தை நேற்று கைது செய்­தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு புழல் சிறையில் அடைக்­க­ப்­பட்டார்.

பொதுமக்கள் பத்திரிக்கையில் வரும் விளம்பரங்களில் உண்மை தன்மை அறிந்து பணத்தை நிறுவனங்களில் முதலிடு செய்ய வேண்டும். மேலும் M/S.Nathan Foundation நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என போலீஸ் கமி­ஷனர் அருண் தெரி­வித்­துள்­ளார்.

Comments (0)
Add Comment