அர­சுத்­து­றை­களில் வேலை வாங்கித்­த­­ரு­­வ­தாக ரூ. 70 லட்சம் ஏப்­பம்: தடய அறி­வியல் துறை உத­வி­யா­ளர் சிறையில் அடைப்பு: சென்னை மத்­தியக் குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

இந்துசமய அறநிலையத்துறை, பத்திரபதிவுத் துறை, TNPSC மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூபாய் 75 லட்சம் பணத்தை ரொக்கம் மோசடி செய்து போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய சென்னையை சேர்ந்த நபரை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்­த­னர்.

விஜி என்பவர் அரக்கோணத்தில் அழகப்பா தொலைதூர கல்வி மையம் நடத்தி வரு­கிறார். சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் விஜிக்கு அறி­மு­க­மா­கி­யுள்­ளார். தமிழக அரசு உயர் அதிகாரிகளிடம் நல்ல பழக்கம் உள்ளது என செல்­வராஜ் ஆசை வார்த்தை கூறி­யுள்ளார். மேலும் அவர் விஜியின் கல்வி மையத்தில் படிக்கும் 26 மாணவர்களுக்கு இந்து சமயஅறநிலையத்துறை, பத்திரப்பதிவுத்துறை, TNPSC மற்றும் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி­ ரூ. 75 லட்சம் பணத்தை ரொக்கமாக பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். அது தொடர்­பாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் விஜி புகார் அளித்­தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா அறிவுரையின் பேரில், துணை ஆணையாளர் செல்வராஜ் நேரடி மேற்பார்வையில் வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புலன் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் செல்வராஜ் தற்போது விழுப்புரம் தடய அறிவியல் துறையில் உதவியாளராக வேலை செய்து வருவதும், இவர் இந்து சமய அறநிலையத்துறை, பத்திர பதிவுத்துறை, TNPSC மற்றும் இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக கூறி புகார்தாரரிடம் ரூ.75 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டது உண்மை என விசாரணையில் தெரியவந்தது.

அத­னை­ய­டு­த்து மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு தனிப்படையினர் தலைமறைவாக இருந்த சென்னை திரு­நீர்­ம­லையைச் சேர்ந்த செல்­வ­ராஜை 16.04.2025 அன்று கைது செய்­தனர். விசா­ர­ணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்­தப்­பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்­கப்­பட்­டார். செல்வராஜ் என்பவரிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்து எவரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்­டுள்­ளனர்.

Comments (0)
Add Comment