கோவில்களில் கைவரிசை: தோளில் போட்ட துண்டை வைத்து திருடனை கைது செய்த தனிப்படைக்கு கோவை கமிஷனர் பாராட்டு

சமீபத்தில் கோவை மாநகரில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றில் ஒரு நபர் சுவர் ஏறிச் சென்று அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றான். இது தொடர்பாக கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் அதில் முகமோ அல்லது வேறு அடையாளங்களோ சரியாக கிடைக்கவில்லை. அந்த நபர் கோயிலிலிருந்து சுவர் ஏறி குதித்து வெளியே செல்வது மட்டும் தெரிய வந்தது. ஆனால் கோவிலுக்கு உள்ளே எப்படி சென்றார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

காவல் அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாக முயற்சி செய்து பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கடைசியில் சுவரை ஏறி குதித்த பகுதியை ஓரளவுக்கு அனுமானித்து அதிலிருந்து விசாரணையை தொடர்ந்தனர். அந்த நபர் சுவர் ஏறி குதித்து வெளியே வந்து அங்கே காய்ந்து கொண்டிருந்த ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு பின்பு உக்கடம் பஸ் ஸ்டாண்டு மற்றும் சிங்காநல்லூர் சென்று அங்கிருந்து மதுரை செல்லக்கூடிய பஸ்ஸில் ஏறி செல்வது மட்டும் தெரிந்தது. அதே பஸ்ஸில் தனிப்படையினர் பயணித்து அந்த கண்டக்டரிடம் அந்த பஸ் எங்கெங்கே நிற்கிறது என்பது குறித்து விசாரித்தனர்.

அந்தந்த இடங்களில் எல்லாம் இறங்கி கோவையிலிருந்து மதுரை வரைக்கும் சென்று அங்குள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் அந்த நபர் அந்த இடத்தில் இறங்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு கடைசியில் மதுரை பஸ் ஸ்டாண்ட்டில் போய் இறங்குவதை சிசிடிவி மூலம் கண்டுபிடித்தனர். சிசிடிவியில் உள்ள கேமரா போட்டோக்கள் உதவியுடன் மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தனிப்படையினரிடம் விசாரித்ததில் கோவில்களில் கைவரிசை காட்டிய நபர் தேனியை சேர்ந்தவர் என்றும் மதுரையில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிந்து உடனடியாக அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கோவில்களில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

அவர் அணிந்திருந்த துண்டுதான் கடைசி வரைக்கும் அவரை அடையாளம் காணுவதற்கு காண்பதற்கு உதவியது. தலைகுனிந்தே அந்த நபர் பயணம் செய்ததால் அவர் அணிந்திருந்த துண்டு மூலமே முழுப் புலன் விசாரணையும் செய்யப்பட்டது. குற்றவாளியை கைது செய்த காவல் அதிகாரிகளையும் அவர்களுக்கு புலன் விசாரணையில் உதவியாக இருந்த முகமது அனீஸ் மற்றும் அப்துல் சுபான் ஆகியோரை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெகுவாக பாராட்டினார்.

 

Comments (0)
Add Comment