சென்னை, மண்ணடி பகுதியில் நடந்து சென்ற நபரின் செல்போன் மற்றும் பணம் பறித்துச் சென்ற 2 நபர்களை போலீசார் கைது செய்து 1 செல்போனை பறிமுதல் செய்தனர்.
சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ், (18). கடந்த 09.05.2023 அன்று மாலை, மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த 2 நபர்கள் விமல்ராஜ் சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் பணம் ரூ.600/-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து விமல்ராஜ் B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
எஸ்பிளனேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகள் ஓட்டேரியைச் சேர்ந்த செல்வம் (22), மணிகண்டன் (எ) அப்பு (20, த/பெ.ராஜேந்திரன், B பிளாக், கஸ்தூரிபாய் காலனி, கன்னிகாபுரம், ஓட்டேரி, சென்னை ஆகிய இருவரை நேற்று (11.05.2023) கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரிகள் செல்வம் மீது 4 திருட்டு வழக்குகளும், மணிகண்டன் (எ) அப்பு மீது 2 திருட்டு வழக்குகள் உட்பட 3 குற்ற வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (11.05.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.