சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் “குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான” உறுதி மொழி ஏற்கப்பட்டது.
நேற்று (12.06.2023) காலை 11 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன் தலைமையில், கூடுதல் காவல் ஆணையாளர் மகேஸ்வரி, துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள், “குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான” உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.