ஈரோட்டில் மரம் ஏற்றி வந்த லாரி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து

கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. ஆசனூரைச் சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) லாரியை ஓட்டி வந்தார். ஆசனூர் மலைப்பாதையில் லாரி வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. இதில் லாரி டிரைவர் ஜெகதீஷ்வரன் படுகாயம் அடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து ஒரு லாரி பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூர் நோக்கி சென்றது. லாரி தட்டகரை வேலம்பட்டி பிரிவு என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Comments (0)
Add Comment