சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மங்கள் ராஜ் (வயது 79). தென்சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கவுன்சிலராகவும் இருந்தார். கடந்த 2007ம் ஆண்டு தாம்பரம் பகுதியில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 66 சென்ட் நிலத்தை மங்கள்ராஜ் வாங்கியிருந்தார். இதன் தற்போதைய மதிப்பு ரூ. 12 கோடி. இந்த நிலத்தை மர்ம நபர்கள் போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மங்கள்ராஜ் கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்தார். அது தொடர்பாக நிலமோசடி தடுப்புப்பிரிவு
போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மங்கள்ராஜ் நிலத்தை குரோம்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ், அவரது சகோதரர் கோபு ஆகியோர் அபகரித்ததும், அவர்களுக்கு திமுகவைச் சேர்ந்த இளங்கோவன் அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு நிலம் தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் வந்ததால் வழக்கு விசாரணை அங்கு மாற்றப்பட்டது. துணைக்கமிஷனர் சுப்புலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி குற்றவாளிகள் நாகராஜன், கோபு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருக்கும் ஜெயலட்சுமி, இளங்கோவன், ராமமூர்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.