ராமநாதபுரத்தில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 180 கிலோவை தமிழக அமலாக்கப்பணியக குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
இது தொடர்பாக, ராமநாதபுரம் வெத்தலையைச் சேர்ந்த காமேஷ் (25), வினோத் கண்ணன் (35) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வேதாளையைச் சேர்ந்த சசி மற்றும் கோபி ஆகியோர், வட மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அதனை படகு மூலம் இலங்கைக்கு கடத்த ராமேஸ்வரம், வேதாளைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடிக்க, இராமநாதபுரம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வெற்றிகரமான நடவடிக்கையை நடத்தியதற்காக, காவல் ஆய்வாளர் திருமதி டி.அன்பரசி தலைமையிலான சிறப்பு நடவடிக்கை குழுவினை காவல்துறை கூடுதல் இயக்குநர், அமலாக்கப் பணியகம் முனைவர் ஏ. அமல்ராஜ் வெகுவாக பாராட்டினார்.