பெரும்பாக்கம் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரசகிய தகவல் வந்தது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் 08.03.2025 ம் தேதி, சுமார் 8 மணியளவில் பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் மெயின் ரோடு, பொலினேனி அப்பார்ட்மண்ட் எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.
அங்கு நின்றிருந்த ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகுதி அப்பளநாய்டு (42), கெம்மெலி சத்திபாபு (32) ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 110 கிலோ கஞ்சா மற்றும் 1 கைபேசி கைப்பற்றப்பட்டது. கஞ்சாவை விசாகப் பட்டினம் மாநிலத்தில் இருந்து