சிறுபான்மை நலத்துறை அமைச்சரை சந்தித்த ஐயூஎம்எல் நிர்வாகி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் பொருளாளர் காயல் ஜெஸ்முதீன், சமூக ஆர்வலர் காயல் நூகு அப்துல் காதர் ஆகியோர் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகானை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். மரியாதை நிமித்தமாக நடந்த இந்த சந்திப்பின் போது காயல் ஜெஸ்முதீன் அமைச்சர் ஷாஜஹானுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் “நபிகள் நாயகம் அவர்களை அறிந்து கொள்வோம்” என்னும் நூலையும் அன்பளிப்பாக வழங்கினார்.