சென்னை செம்மொழி பூங்கா மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யூடியூப்பில் (youtube) வீடியோ பதிவிட்ட நபரை தென்சென்னை சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.
நேற்று (29.07.2024), சென்னை பெருநகர காவல், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் (South Zone Cyber Crime PS), தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஒரு புகார் அளித்தார். நான் தினந்தோறும் காலையில் செம்மொழி பூங்காவில் நடைபயிற்சி செல்கிறேன். அதன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிப்படுத்தும் வகையில் ஆபாசமான உடல் மொழி சைகளை வீடியோ பதிவு செய்து அந்த காணொளியை youtube ல் பதிவேற்றம் செய்துள்ளனர். அதனை பிரியாணி மேன் என்ற youtube channel நடத்தி வரும் அபிசேஷக் ரபி என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.
தென்சென்னை இணைக்கமிஷனர் சிபிச்சக்கரவர்த்தி மேற்பார்வையில் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் BNS ACT, IT Act, Indecent representation of Women (Prohibition) Act and தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து அபிஷேக் ரபி (29) என்பவரை நேற்று (29.07.2024) போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அபிஷேக் ரபி நேற்று (29.07.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.