சென்னை நகர காவல்துறை மற்றும் சென்னை மாநிலக்கல்லூரி இணைந்து கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்திய “பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு” பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.
சென்னை நகரில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு “பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை” ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை நகர காவல்துறை மற்றும் சென்னை மாநில கல்லூரியும் இணைந்து, கல்லூரி மாணவ மாணவிகளுக்கிடையே
“பேச்சுப்போட்டிகள்” மற்றும் “விவாத போட்டிகள்” நடத்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, குழந்தைகள், பெண்கள் குற்றத்தடுப்புப் பிரவு துணைக்கமிஷனர் வனிதா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் இன்று (10.01.2024) சென்னை மாநில கல்லூரியில் உள்ள PROF.POWELL கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் “பெண்கள் பாதுகாப்பும் சமூக முன்னேற்றமும்” என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியும், “இன்றைய பெண்களின் உயர்வுக்கு அலுவலகம் செல்வது சிறந்ததா அல்லது தொழில் முனைவராவது சிறந்ததா” என்ற தலைப்பில் விவாத மேடை போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச்சுப்போட்டியில்
வென்ற மாணவ மாணவியர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் வனியா, கூடுதல் துணைக்கமிஷனர் அண்ணாதுரை, மாநிலக்கல்லூரி முதல்வர் முனைவர் R. ராமன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.