சென்னை பூக்கடையில் புதுப்பிக்கப்பட்ட “பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை” கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.
வெளி மாவட்டங்களிலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பெண் காவலர்கள் தங்குவதற்கு வசதியாக சென்னை, பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வால்டாக்ஸ் ரோடு, ஐசக்தெருவில் (சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே) “ பழைய பெண் காவலர்கள் ஓய்வு இல்லம்” பயன்பாட்டில் இருந்து வந்தது. இதனை சீரமைத்து பெண் காவலர்கள் தங்குவதற்கு அனைத்து வசதிகளும் உண்டானதாய் நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை இன்று (11.01.2024) காலை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் காவல் ஓய்வு இல்ல வளாகத்தில் மரக்கன்றை கமிஷனர் நட்டார்.
இந்த பெண் காவலர் ஓய்வு இல்லத்தில் மொத்தம் 21 அறைகள் மற்றும் 15 படுக்கைகள் கொண்ட ஒரு பொது அறையும் உள்ளது. இந்த பெண் காவலர் ஒய்வு இல்லத்தின் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழிகள் மற்றும் நடைபாதையில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு அறையில் இருவர் வீதம் 42 பெண் காவலர்களும், பெரிய பொது அறையில் 15 பெண்