சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றங்களை குறைக்கும் நோக்கில் ஆவடி இணைககமிஷனர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.
ஆய்வு பணியின் போது நள்ளிரவில் திறந்திருக்கும் கடைகள் மற்றும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நபர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டார். சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை நடைபெறும் இடங்களில் காவலர்களின் வாகனத் தணிக்கை செயல்பாடுகளை கண்டறிந்து ஆலோசனை வழங்கினார். தனியார் பாதுகாப்பு காவலாளிகளிடம் பாதுகாப்பு குறித்த நடைமுறைகளை கேட்டறிந்தார். முக்கியமாக டாக்டர் விஜயகுமார் கள்ளச் சந்தைகளில் மதுபான விற்பனை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.