சென்னை, சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி கிரயப்பத்திர ஆவணங்கள் சமர்ப்பித்து ஏமாற்ற முயன்ற வழக்கில் மேலும் 2 நபர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். கம்ப்யூட்டர் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை சைதாப்பேட்டை சார்பதிவாளர் ராஜசேகர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘சென்னை திருவான்மியூர் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலையில் உள்ள சுமார் 23 கிரவுண்ட் இடம் உள்ளது. அதனை போலியான கிரய ஒப்பந்தப் பத்திரத்தை தயாரித்து அருண் மல்கோத்ரா என்பவர் ஹர்ஷ் மல்கோத்ரா என்பவருக்கு அந்த இடத்தை விற்பனை செய்வதற்காக தயார் செய்யப்பட்ட மாதிரி பத்திரத்தை (Draft Deed) சரிபார்க்க சார் பதிவாளர் அலுவலகத்தில் கமலக்கண்ணன் என்பவர் மனு அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
கமலக்கண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் படி போலியான ஆவணங்கள் தயார் செய்த படப்பையைச் சேர்ந்த படப்பை சுரேஷ்குமார், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் சௌத்ரி மற்றும் கோடம்பாக்கத்தை சேர்ந்த ராஜீ ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் தலைமறைவானதையடுத்து நேற்று (29.05.2024) சுரேஷ்குமார், யுவராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். போலி ஆவணம் தயார் செய்த கோடம்பாக்கத்தில் உள்ள ராசி கிராபிக்ஸ் என்ற கம்யூட்டர் அலுவலகத்தை சோதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அங்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப் பயன்படுத்திய 2 CPUs, 2 Monitors, Printer -2, Fake rubber stamps -8, Fake Voter ID-15, Empty rubber stamp handle-35, Fake sale deeds, Tamil Nadu Goverment Holograms, Holograms, Fake Educational Certificates ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், யுவராஜ் சௌத்ரி ஆகிய இருவரும் நேற்று (29.05.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.