வேலூர், செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு சொந்தமாக அம்பத்தூர் தாலுக்கா, திருமுல்லைவாயில் கிராமம், சரஸ்வதி நகரி 3,600 சதுரடி நிலம் உள்ளது. இதனை மர்ம நபர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து அதில் வீடு கட்டி அபகரித்துள்ளனர்.
என்பது தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் அரவிந்தனின் நிலத்தை அபகரித்த திருமுல்லையவாயலைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த ராஜா ஆகியோரை கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த புகாரில் குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் குழுவினரை கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.