தூத்துக்குடி தருவைக்குளத்தில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது: 350 கிராம் கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் பைக்கில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்து 350 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

ராகவன் (எ) ரகு

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தீவிரம் காட்டி வருகிறார். அடிக்கடி வாகன சோதனைகள் நடத்தப்பட்டு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் விளாத்திகுளம் சப்டிவிஷன் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தருவைகுளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி தலைமையில் எஸ்ஐ முத்துமாலை தலைமையில் போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

பூபேஷ்

அப்போது தருவை குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தருவைகுளம் கடற்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த பூபேஷ் (20) மற்றும் ராகவன் (எ) ரகு (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் பையை சோதனையிட்ட போது உள்ளே கஞ்சா இருப்பது தெரியவந்ததும் அதனை பறிமுதல் செய்தனர். பூபேஷ் மற்றும் ராகவன் (எ) ரகு ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 350 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடமிருந்த இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து தருவைகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சாவை கைப்பற்றிய டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, எஸ்ஐ முத்துமாலை உள்ளிட்ட போலீசாரை எஸ்பி பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.

Comments (0)
Add Comment