இந்திய அளவில் 3வது இடத்தை பிடித்த “Trac KD” செயலி: கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு மத்திய அரசு பாராட்டு

இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்ததற்காக ரவுடிகளை கண்காணிக்கும் ‘Trac KD’ செயலியை உருவாக்கிய சென்னை நகர தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்காவுக்கு மத்திய அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) 4வது Crime and Criminal Tracking Network & Sysgtems (CCTNS) ஹேக்கத்தான் மற்றும் சைபர் சேலஞ்ச் – 2023 என்ற போட்டியை நடத்தியது. இதில் “மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் காவல்துறையிடம் கிடைக்கும் தொழில்நுட்ப பயன்பாட்டின் ஒப்பீட்டு மதிப்பீடு” என்ற பிரிவின் கீழ், குற்றவாளிகளின் விவரங்கள் மற்றும் தேடல்களை விரைந்து அறிந்து கொள்ள

ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு கொண்ட TracKD செயலி அனைத்து மாநிலங்களுடன் நடந்த போட்டியில் 3வது இடத்தை பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், “TrackD” செயலியை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக அமல்படுததி வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக, சென்னை பெருநகர காவல், கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு 3வது பரிசுக்கான விருது வழங்கப்பட்டது.

25.11.2022 அன்று தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட “TracKD” செயலி, சரித்திர பதிவேடு போக்கிரிகளின் (History Sheet Rowdies) செயல்பாடுகளைக் கண்காணிக்க சென்னை நகர காவல் துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. பிரேம் ஆனந்த் சின்கா உருவாக்கிய இந்தச் செயலி காவல்துறை அதிகாரிகளுக்கு விரல் நுனியில் ரவுடிகள் பற்றிய பல்வேறு விவரங்களைத் தருகிறது. மேலும், 39 மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதுடன், சரித்திர பதிவேடு போக்கிரிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ள பெரிதும் இந்த செயலி உதவுவது பெரிய சாதனையாகும். ரவுடிகளை ஒழித்து சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைப்பதில் தமிழக காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமான “TracKD” செயலியை அறிமுகப்படுத்தியதற்காக கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Comments (0)
Add Comment