தூத்துக்குடி உட்கோட்ட காவல்துறையினரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி உட்கோட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசாரின் கவாத்து மற்றும் உடற்பயிற்சி இன்று (25.11.2023) காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் பூங்கா முன்பு நடைபெற்றது. காவலர்களின் கவாத்து மற்றும் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் உடனிருந்தார்.