நெல்லை லிட்டில் பிளவர் பள்ளியில் தமிழ் பாரம்பரிய கலை விழா

நெல்லை லிட்டில் பிளவர் பள்ளியில் தமிழ் பாரம்பரிய கலை விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி கோட்டீஸ்வரன் நகர் லிட்டீல் பிளவர் பள்ளியில் உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டு அகாடமியின் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. விழா முடிவில் கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், விருதுகள் வழங்கி கவுரவிக்கும் விழா நடந்தது. சேவா ரத்னா டாக்டர் ரஷ்மி ரூமி தலைமையில் நடந்த இவ்விழாவில் மதிமுக செயலாளர் கேஎம்ஏ நிஜாம், சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நெல்லை மேயர் சரவணன், துணை மேயர் ராஜி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இசை முரசு பாடகர் அபூபக்கர், அலாவுதீன், காயல் எஸ்எம் முஹம்மத் ஷமீம், காயல் ஜெஸ்முதீன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Comments (0)
Add Comment