தமிழ் நாடு
தமிழ் மொழியைத் தினம் நாடு
தமிழ் மண்ணின் புகழ் பாடு
தமிழ் நூல்கள் புலமை நாடு
தமிழ் அறிஞர் திறனைப் பாடு
தமிழ் நாட்டுக் கலைகள் நாடு
தமிழ் பாட்டை இதமாய்ப் பாடு
தமிழ் மக்கள் புகழை நாடு
தமிழ்ப் பெருமை துதி பாடு
தமிழ்ப் பேசும் உலகை நாடு
தமிழ் இலக்கியச் சிந்து பாடு
தமிழ் கூறும் அறிவை நாடு
தமிழ் வீரச் செயலைப் பாடு
தமிழ்த் தாயின் பாதம் நாடு
தமிழ் என்னும் இனிமை பாடு
தமிழ் எங்கள் தமிழ் நாடு
தமிழ் மொழியின் இளமையைப் பாடு
தமிழ் வழியில் கல்வி நாடு
தமிழ்க் குறளின் புலமை பாடு
தமிழ் வரலாற்றின் சிறப்பை நாடு
தமிழ்ப் பண்பை நீயும் பாடு
தமிழ்க் கலாச்சார அழகை நாடு
தமிழ் நல்லற உறவைப் பாடு
தமிழ் போற்றும் நட்பை நாடு
தமிழ் விருந்தை மகிழ்ந்து பாடு
தமிழ் கொள்கை நாளும் நாடு
தமிழ் பாரதி பாட்டு பாடு
தமிழ் விளம்பும் அறநெறி நாடு
தமிழ் எங்கள் தமிழ் பாடு.
– அ. அமல்ராஜ், இ.கா.ப