சென்னையில் நடந்த பழம்பெரும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
சென்னை, பழைய மகாபலிபுரம் ரோடு ராஜிவ்காந்தி சாலையிலுள்ள ஹோட்டல் துர்யாவில், Heritage Cars Association of India (HCAI) சார்பில் HERITAGE ROLLERS -2023 என்ற பழம்பெரும் மோட்டார் வாகனங்களின் கண்காட்சி இன்று நடந்தது. அதனை சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க 56 கார்கள் மற்றும் 12 மோட்டார் சைக்கிள்கள் என 68 மோட்டார் வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் மற்றும் துணை ஆணையாளர்கள் மகேஷ்குமார், அடையாறு துணைக்கமிஷனர் பொன்கார்த்திக் குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.