ரூ. 5 கோடி மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையை தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அமெரிக்காவிலிருந்து மீட்டுள்ளனர்.
தமிழக கோவில்களில் இருந்து திருடப்படும் சிலைகள் வௌிநாடுகளில் உள்ள அருங்காட்சியகளுக்கு விற்கப்பட்டு அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை ஐஜி தினகரன், எஸ்பி சிவக்குமார் மேற்பார்வையில் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு தனியார் கலைப்பொருட்கள் சேகரிப்பாளர்களால் நடத்தப்படும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து இணையதளங்கள் மூலம் தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் லூயிஸ் கல்சன் என்பவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட Gold of the Gods என்ற ஒரு கட்டுரையைக் கண்டறிந்தனர். அதில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணர் (குழந்தை கிருஷ்ணர் காலிங்கன் எனப்படும் பாம்பின் மேல் நடனமாடும் நிலையில் உள்ள) உலோக சிலையின் புகைப்படத்தினை வளைத்தளத்தில் கண்டறிந்தனர். அதனையடுத்து பல்வேறு இணையதளங்களில் மேற்காணும் சிலை குறித்த தகவல்களையும் தனிப்படையினர் சேகரிக்கத் தொடங்கினர்.
Hold on your Hat Antiquities dealer Douglas Latchford. a/ka Pakpong Kriangsak என்ற பெயரில் ஒரு கட்டுரை 27.09.2019 அன்று Association for Research Crimes Against Art (ARCA) என்ற இணையதனத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ்லாட்ச் போர்டு என்பவர் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை தனிப்படையினர் கண்டறிந்தனர். இவர் கம்போடியா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இதரநாடுகளில் உள்ள தொன்மை வாய்ந்த சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர். மேலும் இவர் பன்னாட்டு கள்ளச் சந்தையில் விற்பது மற்றும் வாங்குவது போன்ற செயல்களை செய்து வருபவர் என்பதையும் கண்டறிந்தனர்.
தொடர் விசாணையில் கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை தற்சமயம் அமெரிக்காவில் இருப்பதை பாதுகாப்பு விசாரணை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். உள்நாட்டு என்ற அமைப்பின் கைவசம் இருப்பதையும் தனிப்படையினர் கண்டறிந்தனர். மேலும் டக்ளஸ்லாட்ச்ஃபோர்டு என்பவர் (2020 ம் ஆண்டு இறந்துவிட்டார்) இச்சிலையை சுபாஸ் சந்திர கபூரிடமிருந்து 2005 ம் ஆண்டு அமெரிக்க டாலர் மதிப்பில் 5,50,000 (இந்திய மதிப்பில் ரூ. 5.2 கோடி வாங்கியதும். நான் சிவைனர் என்ற சிலை மதிப்பீட்டாளர் சுபாஸ் சந்திர கபூருக்கு மேற்காணும் சிலை குறித்தான போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உறுதுணையாக இருந்துவந்துள்ளார் என்பதையும் கண்டறிந்தனர்
மேற்காணும் உலோக சிலை குறித்தான தொடர் விசாரணையில் இந்தச் சிலையானது தமிழ்நாட்டின் பிற்காலச் சோழர்காலமான 11, 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது. இந்நிகழ்வுகளை குறித்து ஆராய்ந்த போது கலியகல்கி என்ற கலியமர்த்தன கிருஷ்ணரின் உலோக சிலை 2005 ம் ஆண்டிற்கு முன்னர் சுபாஸ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளால் தமிழ்நாட்டில் உள்ள தேனும் கோவிலில் இருந்து திருடப்பட்டுவிற்கப்பட்டு இருந்திருக்கலாம் என்பது தெரியவந்தது. மேலும் இந்த சிலை எந்த கோவிலிலிருந்து திருடப்பட்டது என்பது குறித்து அறிந்திட தீவிர புலன் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அமெரிக்காவில் உள்ள கலியமர்த்தன கிருஷ்ணர் உலோக சிலையை மீட்க முயற்சிகள் மேற்கொண்டனர். அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பு (HIS) கைப்பற்றிபாங்காங் அரசிடம் 11.10.2023 ல் ஒப்படைத்தனர். பின்னர் பாங்காங்கில் உள்ள இந்திய உயர் ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவினர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லியல்துறை ஆகியோர்களின் இராஜதந்திர முயற்சிகள் மூலம் தாய்லாந்து அரசாங்த்தினரால் 25.06.2024 ல் இந்திய தொல்லியல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 04.09.2024 அன்று தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவு தனிக்குழுவினரிடம் இந்திய தொல்லியல் துறை மூலமாக பெறப்பட்டது.
கூடுதல் தலைமை நடுவர் நீதிமன்றம் (சிலைத் திருட்டு சிறப்பு நீதிமன்றம் கும்பகோணம் வசம் ஒப்படைக்கப்படவுள்ளது. மேலும் இந்த சிலை எந்த கோவிலைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்திட தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேற்காணும் உலோகச் சிலையினை தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் நேரில் பார்வையிட்டு இவ்வுலோக சிலையினை மீட்டெடுத்த தமிழ்நாடு சிலைத்திருட்டு தடுப்புபிரிவின் தனிப்படையினரின் மெச்சத்தகுந்த பணியினை பாராட்டினார்.