சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை நிர்வாகிப்பதற்கும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பல்வேறு காரணிகளை மேம்படுத்துவதற்கு கடினமான முயற்சிகளை எடுத்து வருகின்றன. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலை விபத்துக்களை குறைப்பதற்கும், சிறந்த தொழில்நுட்ப அறிவுடன் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும் முயற்சித்து வருகிறது.
மேலும், இக்கருத்தரங்கில் போக்குவரத்து மற்றும் அதன் முன்னேற்றம் பற்றிய பல்வேறு காரணிகள் பின்வருமாறு விவாதிக்கப்பட்டன:
IITM சாலைப் பாதுகாப்பிற்கான சிறப்பு மையம் (CoERS), ஆனது, விபத்தின் வெளிப்படையான கருத்து மற்றும் அறிவியல் பூர்வமாக உண்மைகளை வெளிப்படையாக கண்டறிவதற்கும், அடிப்படையான காரணங்களை பகுத்தாய்வு செய்வதற்கு ரூட் காஸ் அனாலிசிஸ் மேட்ரிக்ஸ் (RCAM) என்ற முறையை உருவாக்கியுள்ளது. ரூட் காஸ் அனாலிசிஸ் மேட்ரிக்ஸ் (RCAM) ஆனது கட்டமைக்கப்பட்ட விபத்து விசாரணை (SCI) செயல்முறையின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த SCI மூலம், விபத்துக்கான முந்தைய, மற்றும் பிந்தைய நிலை, பெரி-கிராஷ் போன்ற மூன்று கட்டங்களில் மனிதர்கள் வாகனம் ஓட்டும் திறன், சாலை உள்கட்டமைப்பு சுற்றுச்சூழல் தொடர்புக்கான பண்புகளை (3M&E வடிவம்) சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் விபத்துக்கான உண்மையான காரணிகளை ஆராய்வதற்கும், திறனை மேம்படுத்தும் வகையில் IIT சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த 41 புலனாய்வு காவல் அதிகாரிகள், உட்படுத்தப்பட்டார்கள். இந்த பயிற்சியின் மூலம் விபத்துக்கான சாட்சிகளை சேகரிப்பதும், புகைப்படம் எடுப்பதும் மற்றும் விபத்துக்கான உண்மைகளை கண்டறியும் வகையில் திறம்பட பயிற்சி பெற்றவர்களாகிறார்கள்.
சாலைகளில் முறையாகப் பின்பற்றப்படும் பல்வேறு அளவுகோல்கள் மற்றும் காரணிகளுக்குப் பின்னால் அறிவியல் அறிவை வளப்படுத்த அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சியின் மூலம் பயனுள்ளதாக இருந்தன. இந்த கருத்தரங்கு சென்னை பெருநகர போக்குவரத்து அதிகாரிகளின் மூளை சலவைக்கும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் விபத்துகளை குறைப்பதற்கும் உதவியாகிறது. மேலும் இப்பயிற்சியில் பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளையும் மற்றும் பல்வேறு ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன.
இந்த பயிற்சி முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் காவல் ஆணையாளர் போக்குவரத்து சுதாகர், இணை ஆணையாளர் போக்குவரத்து தெற்கு மயில்வாகனன் அவர்களும் முகாமில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி புலனாய்வு அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.