தூத்துக்குடி, ஆத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் இன்று (01.02.2024) ஆய்வு நடத்தினார். அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு

மேற்கொண்டார். மேலும் ஆத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

 

Comments (0)
Add Comment