தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்புப்பிரிவு ஏடிஎஸ்பி கொடிலிங்கம் பணி மாறுதலில் செல்வதையடுத்து எஸ்பி வாழ்த்தி வழியனுப்பினார்.
தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பியாக கொடிலிங்கம் பணியாற்றி வருகிறார். அவர் திருச்சி மாவட்ட சைபர் குற்றப் பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஏடிஎஸ்பி கொடிலிங்கம் இன்று (13.09.2023) மரியாதை நிமித்தமாக தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரை எஸ்பி பாலாஜி சரவணன் வாழ்த்தி நினைவுப்பரிசு வழங்கி வழியனுப்பி வைத்தார்.