தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் தென்மண்டல ஐஜி கண்ணன் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தென்மண்டல ஐஜி டாக்டர் என். கண்ணன் தலைமையில் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளின் நிலை குறித்தும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள எதிரிகளை கைது செய்வது குறித்தும், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைiயில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி, முதல் நிலைக் காவலர் முரளீதரன் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் முருகேசன் ஆகியோரை பாராட்டி தென் மண்டல் காவல்துறை தலைவர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அணில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் லோகேஸ்வரன், வசந்தராஜ், வெங்கடேஷ், மாயவன், அருள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிவசுப்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி ஜெயராஜ், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரதாசன், விளாத்திக்குளம் ராமகிருஷ்ணன், ஆயுதப்படை டிஎஸ்பி புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Comments (0)
Add Comment