சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் மூலம் சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கு ஒரு புகார் மனு வந்தது. அதில், இந்திய குடிமகன் ஒருவர் அமெரிக்கா நாட்டைச்
சேர்ந்த ஒரு பெண்ணை இணையதளத்தில் பின் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருகிறார். மேலும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கடந்த சில ஆண்டுகளாக ஈமெய்ல்கள், ட்விட்டர் (X) மற்றும் ஐ-மெசேஜ்கள் மூலமாக ஆபாசமான புகைபடங்களை அனுப்பி கொலை மிரட்டல்களும் விடுக்கிறார். அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மத்திய குற்றப்ரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தின் டெல்டா-2 அணி காவல் ஆய்வாளர் மேனகா தலைமையிலான குழு விசாரணை நடத்தினர். இதில் அமெரரக் பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தது திருச்சியைச் சேர்ந்த 37 வயதான எதிரி கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் என தெரியவந்தது. அதனையடுத்து தனிப்படை போலீசார் திருச்சி விரைந்து அவரை கைது செய்தனர். இந்தக் குற்றத்தைச் செய்ய பயன்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி மொபைல் போன், ஆப்பிள் ஐபேட் புரோ மற்றும் HP லேப்டாப் ஆகியவை குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. எதிரியை கனம் XI பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சைதாப்பேட்டை, சென்னை அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது போன்ற இணையதள பின்தொடர்தல் (cyberstalking) மற்றும் இணையவழி துன்புறுத்தல்கள் ஆகியவை கடுமையான சிறை தண்டனைகளை பெறக்கூடிய குற்றங்கள் என்று எச்சரித்துள்ளார் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் எச்சரித்துள்ளார். . மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகாரளிக்க இணையதளம் www.cybercrime.gov.in மூலமாகவும் அல்லது அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.