ரூ. 1.76 கோடி மோசடி: வங்கி விற்­பனைப் பிரி­வு மேலாளர் தாயுடன் கைது: சென்னை மத்­தியக் குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

HDFC வங்கியில் விற்பனை மேலாளர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி பலமுறை பணம் கையாடல் செய்த விற்பனை மேலாளர் மற்றும் அவரது தாயை சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் கைது செய்த­னர்.

சென்னை, அமைந்­த­க­ரை HDFC வங்கி, மண்டல மேலாளர் வெங்­க­டேசன் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அமைந்தகரை கிளையில் பணிபுரிந்த அவ்வங்கியின் விற்பனை மேலாளர் திரு­வொற்­­றி­யூரைச் சேர்ந்த மகேந்திரகுமார் (34) மற்றும் அவரது தாயார் விஜயலஷ்மி (54) ஆகிய இருவரும் சேர்ந்து பதவி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்­ளனர். மேலும் அவர்களது LIC POLICY Securityகளை பலமுறை Surrender Value சான்றிதழ்களில் போலியாக தொகையை மாற்றம் செய்து OD Loan தொகையை பலமுறை பெற்றுள்ளனர், இதன் மூலம் வங்கிக்கு மொத்தம் ரூ.1,76,09,172- (ரூபாய் ஒரு கோடியே எழுபத்தி ஆறு லட்சத்து ஒன்பாயிரத்தி நூற்றி எழுபத்தி இரண்டு ரூபாய்) கடன் பெற்று மோச­டியில் ஈடு­பட்­டுள்ள­னர். இவ்­வா­று என அந்த புகார் மனுவில் கூறி­யி­ருந்தார்.

இந்த புகார் மனு மீது உட­னடி நட­வ­டி­க்கை எடுக்­­கும்­படி போலீஸ் கமிஷனர் அருண் சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசுக்கு உத்­த­ர­விட்­டார். மத்­திய குற்­றப்­பி­ரிவு கூடுதல் கமி­ஷனர் ராதி­கா மேற்­பார்­வை­யில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் மகேந்திரகுமார், விஜயலஷ்மி இருவரும் சேர்ந்து விற்பனை மேலாளர் பதவியை தவறாக பயன்படுத்தி சுயலாபம் பெறும் நோக்கத்துடன் வங்கி மற்றும் பொதுமக்களின் அவர்களது பணத்தை கையாடல் செய்து சட்டவிரோதமாக ரூ.1,76,09,172/- பணம் சுயலாபம் அடைந்தது உண்மை என்­பது தெரி­ய­வந்­த­து. அத­னை­ய­டுத்து இரு­வ­­ரையும் போலீசார் கைது செய்து எழும்பூர் கூடுதல் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment