ரூ. 1.52  லட்சம் பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்: அமலாக்கப்பிரிவு காவல்துறை அதிரடி நடவடிக்கை

விழுப்புரத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 1.52  லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபாட்டில்களை தமிழக அமலாக்கப்பிரிவு பேோலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

தமிழகத்திற்கு பிற மாநில மதுபானங்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பிரிவு காவல்துறை அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் ஐஜி ராதிகா மேற்பார்வையில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கெொள்ளப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் விழுப்புரம் மாவட்டம் நவர்குளம் சந்திப்பு ரோடு அருகே விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.

அந்த வழியாக வந்த 2 நான்கு சக்கர வாகனங்களை மறித்த  பேோலீசார் அதற்குள் சேோதனை நடத்தி, அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 52 ஆயிரத்து 390- மதிப்புள்ள ௯௩௬ பாண்டிச்சேரி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதனைக் கடத்தி வந்த பாண்டிச்சேரி கோரிமேட்டைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவரை கைது செய்தனர். மதுபாட்டில்களை கடத்த ரூ. 13,50,000- மதிப்புள்ள Hyundai Verna மற்றும் Mahindra XUV 500 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்ளை பறிமுதல் செய்த தனிப்படை பேோலீசாரை அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாகப் பாராட்டினார். இது போன்ற குற்றங்களை தடுக்க பொதுமக்கள், மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை எண் – 10581 அல்லது CUG No : 9498410581 – னை தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்கும்படி அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment