ஒரே நாளில் 76 மனுக்களுக்கு தீர்வு: ஆவடி கமிஷனர் சங்கர் நடவடிக்கை

ஆவடி காவல் ஆணையரகத்தில் ஒரே நாளில் 76 மனுக்களுக்கு உடனடி தீர்வு அளித்து கமிஷனர் சங்கர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி ஆவடி கமிஷன் சங்கர் வாரந்தோறும் புதன் கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களை பெற்று வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக இன்று 06.09.2023 நடத்தப்பட்ட குறை தீர்ப்பு முகாமில் நிலுவையில் இருந்த 94 புகார் மனுக்களில் 76 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 33 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் புகார் மனுக்களை அளிக்கலாம் என்று கமிஷனர் சங்கர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments (0)
Add Comment