ஆவடி கமிஷனரேட்டில் 20வது பொதுமக்கள் குறை தீர் முகாமில் 113 மனுக்களுக்கு தீர்வு

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று 29.11.2023 பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் 20வது வாரம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த முகாமில் ஆவடி காவல் ஆணையளார் சங்கர் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றார். இக்குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையரக அனைத்து காவல் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். முதல்வரின் முகவரியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தீர்வு காணப்படாத 113 மனுக்கள் உரிய அதிகாரிகள் மூலம் விசாரித்து தீர்வு காணப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 47 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்குறைதீர்க்கும் முகாம் தொடர்ச்சியாக நடைபெறும் என்று ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

 

Comments (0)
Add Comment