ஆவ­டி காவல் ஆணை­ய­ர­கத்தில் குடி­ய­ரசு தின­விழா: கமி­ஷனர் சங்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று (26.01.2025) 76வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நாட்டுப்பற்றை பறைசாற்றும் விதமாக தேசிய கொடியின் வண்ணமிகு பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

இவ்விழாவில், ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த 110 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கி கௌரவித்தார்கள். பணியின் போது சிறப்பாக செயலாற்றிய காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள், ஊர்காவல் படையினர் என 21 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், சமூக ஆர்வலர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளின் நடனங்கள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்ட சுமார் 1000 நபர்களுக்கு சிற்றுண்டி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு விருந்தளிக்கப்பட்டது.

76வது காலை குடியரசு தின விழாவில் ஆவடி காவல் ஆணையரகம் கூடுதல் காவல் ஆணையாளர் கே. பவானீஸ்வரி, காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் மகேஷ்வரன், மத்தியக் குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர் பெருமாள், போக்குவரத்து பிரிவு துணை ஆணையாளர் அன்பு மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், ஊர்காவல் படைப் பிரிவினர்கள், போக்குவரத்து வார்டன்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு குடியரசு தின விழாவை சிறப்பித்தார்கள்.

Comments (0)
Add Comment