ஆதரவற்றோர் இல்லங்களில் தீபாவளி கொண்டாடிய தாம்பரம் காவல் ஆணையரகம்

சென்னை தாம்பரம் போலீஸ் கமிஷனரேட் சார்பில் அங்குள்ள அனாதை மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போலீசார் இனிப்பு, புத்தாடைகள் மற்றும் உணவு வழங்கி தீபாவளி கொண்டாடிய நிகழ்ச்சி நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்

தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் அனாதை இல்லங்களில் காவல்துறை சார்பில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்தன. நேற்று 12.11.2023 தீபாவளி பண்டிகை முன்னிட்டு தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சென்னை பொழிச்சலூர், திருவள்ளுவர் சாலையில் உள்ள சாய்பாபா குருகுலத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு சென்றார்.

அங்கு இருந்த 40 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்பு, பட்டாசு, உணவுப் பொருட்களான அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள் வழங்கி அமல்ராஜ் கலந்துரையாடினார். மேலும் அவர்களிடம் நலம் விசாரித்து அவர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை அமல்ராஜ் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியின் போது தாம்பரம் காவல் துணைக்கமிஷனர் பவன்குமார் ரெட்டி, பல்லாவரம் உதவிக்கமிஷனர் வெங்கட்குமார் ஆகியோர் இருந்தனர்.

மேலும் பள்ளிக்கரணை காவல் மாவட்டங்களில் உள்ள முதியோர் இல்லம், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர்களின் இல்லங்கள் என மொத்தம் 53 இல்லங்களுக்கு அந்தந்த சரகம் மற்றும்

காவல் நிலையத்தில் உள்ள உதவிக்கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் சென்று இனிப்புகள் பட்டாசுகள், புதிய ஆடைகள் வழங்கி, உணவு ஏற்பாடு செய்து, அவர்களோடு சேர்ந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

Comments (0)
Add Comment