நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 39 பார்லிமன்ட் தொகுதிகளில் நேற்று 19.04.2024 பாராளுமன்றத் தேர்தல்2024 வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் டிஜிபி சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னை நகரில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் 5 கூடுதல், 6 கமிஷனர்கள் இணைக்கமிஷனர்கள் மேற்பார்வையில் 18 துணை ஆணையர்கள் தலைமையில் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடந்த 1 மாதத்துக்கு முன்பே சென்னை நகர காவல் எல்லைகள் அனைத்தும் நுண்ணறிவுப்பிரிவு போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நுண்ணியமாக கண்காணிக்கப்பட்டன. பல வாக்குச்சாவடிகளில் மூத்த குடிமக்களை பாதுகாப்புப் பபணியில் இருந்த காவலர்கள் அழைத்துச் சென்று வாக்குச்சாவடியில் கொண்டு போய் விட்டனர். அவர்களுக்கு குடிப்பதற்கு குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சில வாக்காளர்களுக்கு முகவரி மாறியதால் அவர்களது வாக்குச்சாவடிகள் எங்குள்ளது என்பது தெரியாமல் அலைந்து திரிந்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் வாக்குச்சாவடி குறித்து தகவல் தெரிவித்து உதவிகள் செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, பீட்டர்ஸ் காலனி அரசு குடியிருப்பு தற்போது இடிக்கப்பட்டு அங்கு புதிய அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அந்த பகுதியில் வசித்து சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடி எங்குள்ளது என்பது தெரியாமல் அலைந்து திரிந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த அண்ணாசாலை போலீசார் அழைத்து விசாரித்து, பீட்டர்ஸ் சாலையில் உள்ள மோனகன் பள்ளியில் வாக்குச்சாவடி இருப்பதை விசாரணை செய்து அறிந்து தகவல் தெரிவித்து அங்கு செல்லும்படி தெரிவித்தனர். மேலும் வாக்குச்சாவடிக்கு 100 அடிக்கு தள்ளிதான் வாகனங்கள் நிறுத்தப்படவேண்டும் என காவல்துறை உத்தரவிட்டிருந்ததால் வாக்குச்சாவடிகள் அருகில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இடவசதியோடு இருந்தன.
மேலும் வாக்குச்சாவடிக்குள் குறைந்த பட்சம் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாலும் மற்றவர்கள் வௌியில் அமர வைக்கப்பட்டிருந்ததாலும் வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பார்ப்பதற்கு நேர்த்தியாக காட்சியளித்தன. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எந்த பூத்திலும் நடைபெறவில்லை. இது குறித்து சென்னை சாந்தோம் மேல் நிலைப் பள்ளிக்கு வாக்களிக்க வந்த ஒரு மூதாட்டி கூறியதாவது, நடக்க முடியாத என்னை காவலர்கள் 4 சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்று பூத்துக்குள் கொண்டு சென்று விட்டனர். நான் சிரமமின்றி வாக்களித்து விட்டு வந்தேன்” என்றனர்.
மேலும் சென்னை நகர் வாக்குப்பதிவு முடியும் வ ரை தொடர் ரோந்துப் பணியில் இருந்த கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான சென்னை மயிலாப்பூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் சென்று வாக்குப்பதிவுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இந்த வகையில் சென்னை நகரில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா (தெற்கு), ஆஸ்ரா கார்க் (வடக்கு) மற்றும் செந்தில்குமாரி (மத்திய குற்றப்பிரிவு), ஆர். சுதாகர் (போக்குவரத்து), கபில்குமார் சரத்கர் ஆகிய 5 கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை நகரில் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று மிகவும் அமைதியாக நடைபெற்றதை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.