ஆன்லைன் மூலம் ரூ. 25 ஆயிரத்தை அபேஸ் செய்த ஜார்க்கண்ட் ஆசாமி கைது

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த தெல்மாகரோலின் என்பவருக்கு அடையாளம் தெரியாத கைபேசி எண் 8600492441-இல் இருந்து ஒரு குறுஞ் செய்தி உடன் கூடிய லிங்க் “https://ippvbn.cleverapps.io/” மூலம் அவருடைய India Post Payments Bank (IPPB) வங்கி கணக்குடன் PAN கார்டை update செய்யவேண்டும் என்றும் இல்லை என்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று தெரிவிக்கபட்டிருந்தது. அதை உண்மை என்று நம்பி அந்த link-ஐ click செய்து IPPB வங்கி விவரங்களையும் OTP-யையும் உள்ளீடு செய்துள்ளார்.

ஏடிஜிபி சஞ்சய்குமார்

இதனால் அவர் IPPB வங்கி கணக்கில் இருந்து ருபாய் 25,000 -அவருடைய அனுமதி இன்றி வேறு ஒருவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர் 1930-க்கு கொடுத்த புகார் மீது தலைமையக இணைய வழி குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டனர். இதில்  பணத்தை ஆட்டையைப் போட்டவர் ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது. எனவே இணையவழி குற்றப்பிரிவு காவல்துறை ஏடிஜிபி சஞ்சய்குமார் உத்தரவுபடி டிஎஸ்பி தெய்வேந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜான் மரிய ஜோசப் மற்றும் 4 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

எதிரி ஜார்க்கண்டைச் சேர்ந்த ஆகாஷ்மண்டல் வயது (21 ) என்பவரை 27.10.2023 அன்று ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டம் மார் கோடி கிராமத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில்  ஆகாஷ்மண்டல் தானும் ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தை சேர்ந்த தன்னுடைய நண்பன் முகேஷ் மண்டல் என்பவரும் சேர்ந்து IPPB வாடிக்கையாளர்களை ஏமாற்ற link-ஐ குறுஞ் செய்தி மூலம் அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். மேலும் எதிரியின் கைபேசி மற்றும் sim கார்டு ஆகியவற்றை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. கைதி வழிக் காவல் மூலம் இருவரையும் போலீசார் சென்னை கொண்டுவந்தனர்.

பொதுமக்கள், அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ,வாட்ஸ் அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடக்கையாளுதல்கள் மூலமாக வருகின்ற லிங்குகளை தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் மற்றும் OTP – யை பகிர வேண்டாம் எனவும் இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் சஞ்சய் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Comments (0)
Add Comment