சென்னைப் பெருநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாலியல் சட்டம் குறித்த வழிமுறைகள் தொடர்பான புத்தாக்கப் பயிற்சி சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் இன்று (18.11.2023) சென்னைப் பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வுக் கூடத்தில் நடைபெற்றது.
மேற்றிப்பிட்ட பயிற்சியில் சென்னைப் பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாலியல் வழக்குகளில் எவ்வாறு செயல்படுவது குறித்தும் கையாள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு (CWC), காவல் துணை ஆணையாளர் Dr.G. வனிதா. உதவி ஆணையாளர் சீனிவாசன், CWC, காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.