வட­கி­ழக்கு பரு­வ­ம­ழை பேரிடர் மீட்­புக்­கு­ழு: டிஜிபி சங்­கர்­ஜி­வால் நேரில் ஆய்­வு

வட­கி­ழக்கு பரு­வ­மழை பேரிடர் மீட்­புக்­கு­ழு­வை டிஜிபி சங்­கர்­ஜிவால்  பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார்.

­வ­ட­கி­ழக்கு பரு­வ­மழை தொட­ங்கி­யதை அடுத்து சென்னை ராஜா அண்ணாமலைபுரம், மருதம் வ­ளா­கத்தில் உள்ள ஐஜி, செய­லாக்கம், அலுவலகத்தில் பருவமழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டறை துவங்கப்­பட்­டுள்­ளது. அங்கு டிஜிபி சங்­கர்­ஜிவால் நேரில் சென்று அது செயல்படும் விதம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். மேலும் கன மழை, அதிக கன மழை பெய்யும் பகுதிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள் மற்றும் நீரில் மூழ்கி, மழை நீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சாலைகளின் நிலை ஆகியவற்றைக் கண்காணிக்கவும் அறிவுரைகளை வழங்கினார். இங்கு தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு அதி தீவிரப்படையின் 6 பேரிடர் மீட்பு குழுக்களை நேரில் சந்தித்து டிஜிபி சங்கர்­ஜிவால் தக்க அறிவுரைகளை வழங்கினார். மேலும், பேரிடர் மீட்பு தொடர்பான உபகரணங்களையும் ஆய்வு செய்தார். இந்த கட்டுப்பாட்டறையானது மாநில அவசரநிலை மையம் (SEOC), மாவட்ட அவசரநிலை மையங்கள் (DEOC) மற்றும் காவல் துறையில் உள்ள அனைத்து மாவட்டம் மற்றும் மாநகர கட்டுப்பாட்டறைகளுடன் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments (0)
Add Comment