மத்திய சிறைகளில் நன்னாரி சர்பத் மற்று நீர் மோர் பந்தல்: டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் காவலர்கள், காவல் அதிகாரிகளின் தாகத்தை தணிப்பதற்காக நன்னாரி சர்பத் மற்றும் நீர்மோர் பந்தல் திறந்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கோடை வெயிலின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கொளுத்தும் வெயிலில் காவல் பணிபுரியும் காவலர்களின் நலனை காக்க பல்வேறு நடவடிக்கைகளை உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் புது உத்தரவை டிஜிபி அமரேஷ் புஜாரி நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன்படி மத்திய சிறைகளுக்கு நீதிமன்ற

உத்தரவின் பேரில் கைதிகளை சிறைகளில் அடைப்பதற்காக அழைத்து வரும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கோடை வெயிலின் தாக்கத்தால் தாகம் அடைந்து சோர்வடையும் வாய்ப்பு உள்ளது. ஆகவே அதனை போக்கி அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளுக்குச் செல்லும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் வழங்குவதற்காக அனைத்து மத்திய சிறைகளிலும் ஸ்டால்கள் திறக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

Comments (0)
Add Comment