நவீன தொழில் நுட்பங்களை கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை காவல் அதிகாரிகள் திறம்பட கையாளுவதற்காக மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் (MPF) திட்டத்தின் கீழ் மெகா சிட்டி திட்டம் ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,030 இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் நிறுவப்பட்ட 3090 AI ஆல் இயங்கும் CCTV கேமராக்கள், 753 வாகன கண்காணிப்பு சாதனங்கள், 7 வான்வழி கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் 7 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் நகரம் முழுவதும் விரிவான கண்காணிப்பு உறுதி செய்யப்படுகிறது.
முதல் கட்டத்தில், 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகன சென்னை பெருநகர காவல் ங்கள் நகர கண்காணிப்புக்காக பயன்படுத்த தயாராக உள்ளது. மேலும் 2,250 கேமராக்கள் மற்றும் 650 வாகனங்கள் நிகழ்நேர கண்காணிப்பிற்காக தானியங்கி
வாகன இருப்பிட அமைப்புடன் (AVLS) நிறுவப்பட்டுள்ளன. இன்று (08.03.2024) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்களின் செயல்பாட்டினை துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநககர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.