கூலிப்­ப­டை கும்பல் 21 பேர் ­துப்­பாக்கி மற்றும் தோட்­டாக்­க­ளுடன் கைது * சென்னை நகர காவல்­துறை அதி­ரடி நட­வ­டிக்­கை

சென்னை நகரில் போலீசார் நடத்­திய ரவு­டிகள் வேட்­டையில் திருமங்­க­லத்தில் எதிரியை போட்­டுத்­தள்ள துப்­பாக்கி உள்­ளிட்ட பயங்­கர ஆயு­தங்­க­ளுடன் கூலிப்­படை கும்பல் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம், கடற்கரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சென்னை புளி­யந்­தோப்பு பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்­பாக சந்துரு, அரக்கோணத்தை சேர்ந்த ஜெயபால், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த யமகா மணி ஆகிய 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் பலரை போலீசார் தேடி வந்த­னர். இந்­நி­லையில் குண்டர் சட்­டத்தில் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த ஜெயபால் உள்­ளிட்டோர் சில நாட்­க­ளுக்கு முன்பு ஜாமினில் வௌிவந்து தலை­ம­றை­வாகி விட்­டனர். அவ­ர்­களை போலீசார் தேடி வந்­த­னர். இந்நி­லையில் ஆற்­காடு சுரேஷ் கொலை வழக்­கில் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளிகள் 21 பேரை நேற்று சென்னை திரு­மங்­கலம் போலீசார் துப்­பாக்­கி, அரிவாள், குண்­டு­க­ளுடன் கைது செய்­தனர்.

அது தொடர்­பாக போலீஸ் கமி­ஷனர் சந்­தீப்ராய் இ­ன்று நிரு­பர்­­க­ளுக்கு பேட்­டி­ய­ளித்த போது கூறி­ய­தா­வது:–

ஆற்­காடு சுரேஷ் கொலையில் தொடர்­பு­டைய நபர்கள் சென்னை திரு­மங்­கலம் பகு­தியில் தங்கி­யி­ருப்­ப­தாக சென்னை நகர காவல்துறையின் அதிதீவிர குற்றப்பிரிவு போலீ­சா­ருக்கு வந்த ரக­சிய தகவலின் பேரில் சென்னை நகர வடக்கு மண்­டல கூடுதல் கமி­ஷனர் அஸ்­ராகார்க் நேரடி மேற்­பார்வையில் திரு­மங்­க­லம் தனிப்­படை போலீசார் மார்ச் 13ம் தேதி ராணிப்­பேட்­டையைச் சேர்ந்த ஜெயபால் (63), நெல்லை நாங்­கு­நே­ரியைச் சேர்ந்த சொக்­க­­லிங்கம் என்­கி­ற சுரேஷ் (24), நெல்லை, ராம­யன்­பட்டியைச் சேர்ந்த முத்­துக்குமார் என்­கி­ற மதன் (30 வயது) மற்றும் பிரசன்னா (31), சென்னை கானத்­தூர் வசந்த் டேவிட் (29), அண்­ணா­நகர் செல்­வ­பா­ரதி (26), அசோக்­ந­கர் ராஜ்பிரகாஷ் காட்வின் @ ராஜ்குமார் @ தம்பிராஜன் (57) உட்பட 17 நபர்களை திருமங்கலம் பகுதியில் வைத்து கைது செய்தனர். ஜெயபால் உள்­ளிட்­டோ­ரிடம் நடத்­திய விசா­ர­ணையில் தங்­க­ளது எதி­ரியை போட்­டுத்­தள்­ளு­வ­தற்­காக சென்னை திரு­மங்­க­லத்தில் அறை எடுத்து தங்­கி­யி­ருந்­த­தாக தெரி­வித்­த­னர்.

அவர்­க­ளிடம் விசாரணை செய்த போது 4 கைத்துப்பாக்கிகள், 84 தோட்டாக்கள்,11 கத்தி, 5 கார் ஆகியவை பறி­முதல் செய்­யப்­பட்­டுள்­ள­ன. அடுத்­த­டுத்த விசா­ர­ணையில் இது­வரை மொத்தம் 21 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருமங்கலம் பகு­தி­யில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு அருந்துவதற்காக குற்றவாளிகள் பட்டாக் கத்திகள் துப்பாக்கி களுடன் வந்திருக்கிறார்கள். இதுதொடர்பாக காவல்துறைக்கு வந்த தக­வலின் பேரில் விசாரணை மேற் கொண்ட பொழுது 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்­க­ளுக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் கிடைத்த­ன என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. இவ்­வாறு கமி­ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரி­வித்­தார்.

Comments (0)
Add Comment