சென்னை பெருநகர காவல் ஆணையாளர் போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கான மெகா மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.
இன்று (09.09.2023) காலை வேப்பேரி, அகர்வால் வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் கலந்து கொண்டு, போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மெகா முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த மருத்தவ பரிசோதனை முகாமில் கண் பரிசோதனை (Eye Check-up), ரத்த சர்க்கரை அளவு சரிபார்த்தல், காசநோய் பரிசோதனை (TB Detection), நீரழிவு நோய் பரிசோதனை (DIABETIC), இருதய நோய் பரிசோதனை (CARDIO) காது, மூக்கு தொண்டை பரிசோதனை (ENT), எலும்புகள் (ORTHO) சம்பந்தமான பரிசோதனை, பெண்கள் நலம் (Women Wellness), பல் பிரச்சனைகள் (Dental), மன நலம் (Mental Health) மற்றும் முழுமையான ஆரோக்கியம் (Holistic Wellness) போன்ற மருத்துவ பரிசோதனைகள் உட்பட முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இம்மருத்துவ பரிசோதனை முகாமில் 200 போக்குவரத்து ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை நகர போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் ஆர். சுதாகர், இணை ஆணையாளர்கள் மயில்வாகணன், போக்குவரத்து வடக்கு துணை ஆணையர் அபிஷேக் தீக்ஷித், துணை ஆணையர் (கிழக்கு) சமய்சிங் மீனா காவல் அதிகாரிகள் மற்றும் Rotary International Dist 3232 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.