எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றிய நபர் கைது

சென்னை, வண்ணாரப்பேட்டை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை மீது சிகப்பு நிற பெயிண்ட் ஊற்றிய நபரை ஒரு மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டை, காளிங்கராயன் மெயின் தெரு, அண்ணா திருமண மண்டபம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை மீது யாரோ சிகப்பு நிற பெயிண்ட் ஊற்றியுள்ளது தொடர்பாக, நேற்று (02.08.2023) காலை, அரசு, 70 என்பவர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு, மேற்படி சிலையின் மீது பெயிண்ட் ஊற்றிய பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லியோனார்டு, 43, என்பவரை புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர். விசாரணையில் எதிரி லியோனார்டு எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல என்பதும், இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரி லியோனார்டு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Comments (0)
Add Comment