நெல்லை போலீஸ் கமிஷனராக மகேஷ்வரி, ஐபிஎஸ்., இன்று பொறுப்பேற்றார்

நெல்லை மாநகர காவல்துறையின் புதிய போலீஸ் கமிஷனராக ஐஜி மகேஷ்வரி இன்று பொறுப்பேற்றார். தமிழகத்தில் ஜாதி ரீதியாக பிரச்சினைகள் மிகுந்த பகுதியாக இருக்கும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பெண் ஐஜி நியமிக்கப்படுவது தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

இன்‌‌‌று திருநெல்‌‌‌வேலி மாநகர காவல் அலுவலகத்‌‌‌தில் மகேஷ்வரி ‌பொறுப்‌‌‌பேற்‌‌‌றுக்‌‌‌கொண்‌‌‌டார். ஆயுதப்படையினரின் அணிவகுப்பு

மரியாதையை ஏற்றுக் கொண்ட மகேஷ்வரி பின்னர் அலுவலகத்துக்கு சென்று கோப்புக்களில் கையெழுத்திட்டு போலீஸ் கமிஷனர் பதவியை ஏற்றுக் கொண்டார். ‌

 

Comments (0)
Add Comment