சென்னை ஆர்.கே.நகரில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள்

சென்னை, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 2வது தெருவில் வசித்து வந்­தவர் பபிதா (31). இகு­வ­ரது கணவர் நந்­த­குமார் (32). கடந்த 01.01.2023 அன்று இரவு 8.30 மணியளவில் கணவர் நந்­த­கு­மார் மது குடித்து விட்டு வந்ததை கண்டித்துள்ளார். இதனால் கணவர் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு முற்றியதில் நந்தகுமார், துப்பட்டாவால் மனைவி பபிதாவின் கழுத்தை நெறித்து நந்­த­குமார் கொலை செய்துள்ளார். இது குறித்து பபிதாவின் தந்தை கண்ணன் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்­தார். அதன்­பேரில் போலீசார் கொலை வழக்­குப்­ப­திவு செய்து நந்தகுமாரை கைது செய்­தனர்.

இந்த வழக்கு விசாரணை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்­தது. வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (12.04.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் எதிரி நந்தகுமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த ஆர்கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

Comments (0)
Add Comment