சென்னை செம்பியம் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள்: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

2018ம் ஆண்டு செம்பியம் காவல் நிலைய கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சென்னை, வியாசர்பாடி, கருணாநிதி சாலை, 13வது தெரு.வைச் பரத் (எ) தக்காளி பரத் (44). கடந்த 28.05.2018 அன்று இரவு பரத் (எ) தக்காளி பரத் செம்பியம், நெடுஞ்செழியன் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 நபர்கள் முன் விரோதம் காரணமாக மேற்படி பரத் (எ) தக்காளி பரத் என்பவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த இரத்த காயமடைந்த பரத் (எ) தக்காளி பரத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து பரத்தின் மனைவி சுபேதா என்பவர் செம்பியம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். கொலை வழக்குப் பதிவு செய்து, மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, கக்கன்ஜி காலனி.யைச் சேர்ந்த பார்த்திபன் (எ) ஆகாஷ் (19), கணேசன் (19) , தேவராஜ் (22), தீபக்குமார், 19, ஆகிய 4 நபர்களை கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக, சென்னை, அல்லிக்குளம், 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (12.02.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி வழக்கில் எதிரிகள் பார்த்திபன் (எ) ஆகாஷ், கணேசன், தேவராஜ் மற்றும் தீபக்குமார் ஆகியோர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால், 4 குற்றவாளிகளுக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தேோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்,

Comments (0)
Add Comment