எழும்பூர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்: கோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை, எழும்பூர் கொலை வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 

சென்னை, வில்லிவாக்கம், ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (38). கடந்த 30.01.2015 அன்று எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இரு தரப்பினருக்கிடையயே ஏற்பட்ட தகராறின் போது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் பலத்த காயமடைந்த மேற்படி ஸ்டாலின் இறந்து விட்டார். இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பைச் சேர்ந்த லோகேஷ்வரி (எ) ஈஸ்வரி (28), அரும்பாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் (31) உட்பட 17 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் இன்று (07.11.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் எதிரிகள் லோகேஸ்வரி (எ) ஈஸ்வரி மற்றும் சார்லஸ் ஆகிய இருவர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டு கடுங்காவல் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ. 96,000- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மற்ற குற்றவாளிகள் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்,

Comments (0)
Add Comment