நடப்போம், நலம் பெறுவோம் என்ற சுகாதார நடைப்பாதை திட்டம் மதுரை மத்திய சிறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் கைதிகள் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்களை டிஜிபி அமரேஷ் புஜாரி செய்து வருகிறார். அந்த வகையில் கைதிகள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் மதுரை மத்திய சிறையில், ‘சுகாதார நடைப் பாதை’ திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. சிறைக் கைதிகள் ஒரு நாளைக்கு 8 கிமீ அதாவது 10,000 ஸ்டெப்கள் நடக்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தை மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மதுரை சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறைக் கைதிகளுக்கு நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இருவரும் விளக்கினர். அவர்கள் கைதிகளை தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு பழக்கமாக ஒரு பகுதியாக மாற்ற ஊக்கப்படுத்தினர்.தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி உத்தரவிட்டுள்ளார்.