திருச்­செந்தூர் கோவிலில் பவுர்­ணமி பூஜையை முன்­னிட்டு எஸ்பி பாலாஜி சர­வணன் நேரில் ஆய்­வு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குபேர பவுர்ணமி பூஜையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று (21.06.2024) இரவு குபேர பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக குவிந்தனர்.

இதனை முன்னிட்டு மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி, திருச்செந்தூர் டிஎ­ஸ்பி வசந்தராஜ் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள், 26 உதவி ஆய்வாளர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் இன்று (22.06.2023) அதிகாலை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்

Comments (0)
Add Comment